கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், பள்ளிகள் திறப்பதை மத்திய மாநில அரசுகள் தள்ளி வைத்துள்ளன.
பெரும்பாலும் ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டு துவங்கிவிடும் என்பதால், மாணவர்களின் நேரம் வீணாவதைத் தடுக்கு ஆன்லைன் எனப்படும் இணையதளத்தின் மூலம் கல்வி கற்பிக்கும் முறையை அரசு பரிந்துரையின் பெயரில் பெரும்பாலான பள்ளிகள் தற்போதே துவக்கி விட்டன.
இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் எடுக்க கூடாது என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லை எனப்படும் இணையத்தின் வாயிலாக வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் தமிழக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கும்.
ஊரடங்கின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, பள்ளிகள் திறப்பது, சுழற்சி முறையில் வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து இந்த குழு தரும் அறிக்கையை பொருத்து முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.