கொரோனா சிகிச்சை – 4 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் தமிழக அரசு

0
116
Salary Issue in Delhi Government

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், படுக்கை பற்றாகுறை ஏற்படாம தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே பள்ளி கூடங்கள், தனையார் திருமண கூடங்கள் உள்ளிட்டவற்றை கொரோனா சிகிச்சைக்காக கையக்ப்படுத்தவிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இயங்காத 4 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் தமிழக அரசு, அதனை தற்காலிக கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி பெசன்ட் நகரில் இயங்காமல் உள்ள தனியார் மருத்துவமனை, வளசரவாகத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனை, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான மருத்துவமனையின் ஐந்தாவது, ஆறாவது மாடியையும் கொரொனா சிறப்பு வார்டுகளாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மேலும் 2500 படுக்கை வசதி கிடக்கும் என கூறப்படுகிறது.

இதில் சிகிச்சை பணிக்காக 1500 மருத்துவர்கள் மற்றும் 600 செவிலியர்களை ஒப்பந்தம் அடிப்படையில் பணியமர்த்த தமிழக சுகாதார துறை திட்டமிட்டுள்ளது.

அனுமதி பெற்று கட்டப்படாத இரண்டு மருத்துவமனைகளை பயன்படுத்த நீதி மன்றத்தின் அனுமதியை அரசு நாடவுள்ளது.