ஐஐடி மாணவி பாத்திமா மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா ஸ்டாலின்??!

0
135

ஐஐடி மாணவி பாத்திமா மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா ஸ்டாலின்??!

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி பாத்திமா மரணத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார் என விமர்சனம் எழுந்துள்ளது. முன்னதாக மாணவி பாத்திமா மரணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது.

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல; அதில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துகிறது! அவர்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்க வேண்டும்!

குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதன் மூலமாக நியாயத்தின் பக்கம் நிற்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுகிறது!

இதுபோன்ற நிகழ்வுகள் திராவிட இயக்கம் எப்போதும் தேவை என்பதை தொடர்ந்து உணர்த்துகின்றன என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் எழுந்த வண்ணமே உள்ளன. சமீப காலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மன உளைச்சலை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது என்பது வருந்தத்தக்க விசயமே. மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் இந்த மன உளைச்சல் அவர்களின் படிப்பு சம்பந்தமானது,பாலியல் அச்சுறுத்தல் அல்லது மதம் மற்றும் சாதி சார்ந்த வெளிக் காரணிகள் என நிறைய உள்ளன.

தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் இறப்பில் கூட மதம் சார்ந்த குற்ற சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறாரே தவிர இதிலிருந்து மாணவ மாணவிகள் எவ்வாறு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும், மீண்டும் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றால் யாரிடம் முறையிட வேண்டும் என்று மாணவர்களுக்கு நேர்மறையாக எந்த நம்பிக்கையையும் கொடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எப்போ எங்கே மரணம் விழும் அதில் சாதி மத அரசியலை வைத்து ஆதாயம் அடையலாம் என்று காத்திருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இதற்கு முன் திமுகவின் கூட்டணி கட்சி தலைவரான பாரி வேந்தர் அவர்களுக்கு சொந்தமான SRM பல்கலைகழகத்தில் தொடர்ச்சியாக பல தற்கொலைகள் நடைபெற்ற போது வாயே திறக்காத ஸ்டாலின் இந்த மரணத்தில் மட்டும் கருத்து தெரிவிக்கிறார் என்றால் அது அவருடைய சாதி மத பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.