சரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?

0
2351
TN Peoples asks question about Stalin Speaks in Pollachi Sexual Assault Case-News4 tamil Online News Channel

சரக்கு மிடுக்கு இருப்பதாக பேசிய திருமாவளவனை கூட்டணியில் வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?

சரக்கு மிடுக்கு இருப்பதால் தான் மாற்று சமுதாய பெண்கள் தங்களை தேடி வருகிறார்கள் என்று பெண்களுக்கு எதிராக அருவருக்கத்தக்க வார்த்தைகளை கொண்டு திட்டமிட்டு காதல் செய்யும் நபர்களுக்காக ஆதரவாக பேசிய திருமாவளவனுடன் கூட்டணி வைத்து கொண்டு பொள்ளாச்சி விவகாரத்தை பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் பேசலாமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கடந்த காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களது கட்சி கூட்டத்தில் பேசும் போது மாற்று கட்சியை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் பெண்களை பற்றியும் காதலை பற்றியும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கொண்டு பேசியிருந்தார். பொது வாழ்க்கையில் உள்ள ஒரு நபர் தனது கட்சிகாரர்களை நல்வழிபடுத்துவதை விடுத்து தனது அரசியல் சுயலாபத்திற்காக தவறான கருத்துக்களை திணித்து அந்த இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்தி செல்கிறார் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் கூட அந்த கட்சியை சேர்ந்த சில இளைஞர்கள் அம்பேத்கர் விழா ஒன்றில் கலந்து கொண்டு ‘காதலிப்போம் காதலிப்போம் வன்னியர் பெண்ணை காதலிப்போம் என்றும், திருமணம் செய்வோம் திருமணம் செய்வோம் கவுண்டர் பெண்ணை திருமணம் செய்வோம் என்றும், கட்டியணைப்போம் கட்டியணைப்போம் முதலியார் பெண்ணை கட்டியணைப்போம் என்றும் கோஷமிட அதை மற்ற சில வாலிபர்கள் வழிமொழியும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது. இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த பலர் இதுதான் ஜாதியை ஒழிக்கும் லட்சணமா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இவ்வாறு பெண்களுக்கு எதிராகவும் மாற்று சமுதாயங்களுக்கு எதிராகவும் பேசி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் சாதி மதமற்ற அரசியலை முன்னெடுத்து செல்வதாக கூறும் திமுக கூட்டணி வைத்தது மட்டுமல்லாமல் பொள்ளாச்சியில் காதலிப்பதாக பெண்களை ஏமாற்றி வன்புணர்வு செய்தவர்களை பற்றி பேசுவதும் அந்த பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டி கொள்வதும் முரண்பாடக உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டி கொண்டு தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதா? என்ற  சந்தேகத்தையும் எழுப்புகின்றனர்.

பெண்களின் உணர்வுகளை கொச்சை படுத்திய திருமாவளவனுடன் கூட்டணி மற்றும் தனது சொந்த கட்சியை சேர்ந்த பெண்ணின் இடுப்பை கிள்ளியது, பியூட்டி பார்லரில் உள்ள பெண்ணை அடித்து துன்புறுத்தியது என பெண்களுக்கு எதிராக திமுக தொண்டர்கள் செய்த அட்டூழியங்கள் நிறைய இருக்க தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக பேசுவது அரசியல் ஆர்வலர்களிடம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனியாவது வாக்குக்காக எதையும் பேசிவரும் திருமாவளவன் மற்றும் பெண்களிடம் தொடர்ந்து அத்துமீறும் தனது கட்சி தொண்டர்கள் என அனைவரையும் நல்வழிபடுத்தி செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.