மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா! முதல்வரை தேடும் மக்கள்!

0
148

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா பரவத்தொடங்கியது இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் நாடு முழுவதிலும் இருக்கின்ற பள்ளி கல்லூரிகள் தொழிற்சாலைகள் கடைகள் போன்ற அனைத்தும் முடங்கி போயினர்.

நாட்டில் இருக்கின்ற மக்கள் எல்லோரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து பார்த்தது. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் வந்து சேர்ந்தாலும் அது போதுமானதாக இல்லை என்று சொல்லப்பட்டது.

காரணம் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் தமிழக மக்களை வந்து சேர்ந்தாலும் தொற்று பரவல் குறைவதாக தெரியவில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் பிசிஆர் கருவிகள் நோய்த்தொற்று தடுப்பு கருவிகள் என்று எல்லாவற்றையும் கேட்டுப் பெற்றார். அதோடு இல்லாமல் மாவட்டம்தோறும் பரிசோதனை நிலையங்களை தொடங்கி வைத்தார்.

அதோடு மட்டும் நின்று விடாமல் அந்த பரிசோதனை நிலையங்கள் சரிவர செயல்படுகிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்யத் தொடங்கினார். அதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனைகளும் போதிய வசதிகளுடன் இருக்கிறதா என்பதைக் கண்டறிய தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தொற்றுகாலம் என்று கூட பார்க்காமல் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை செய்தார். இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை என்று அனைத்து விதமான மருத்துவமனைகளும் சரிவர இயங்க தொடங்கின.

அதோடு மருத்துவத் துறையில் மட்டுமல்லாது மற்ற துறைகளிலும் எல்லாம் சரியாக நடந்து கொண்டு இருந்தது. காரணம் தமிழகம் முழுவதிலும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருவதால் எந்த துறையின் மீது அவருடைய பார்வை படும் என்பது தெரியாது ஒருவேளை நம்முடைய துறைக்கு போய்விட்டால் என்ன செய்வது என்று உஷார் ஆனார்கள் அதிகாரிகள்.

இப்படி தமிழகம் முழுவதிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட ஆய்வின் விளைவாக தமிழகத்திலே நோய் தொற்று வெகுவாக குறையத் தொடங்கியது. அதோடு மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்கு உதவி புரியும் விதமாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் நியாயவிலைக் கடைகளில் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் இலவசமாக வழங்கியது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

இதனால் அவருக்கு தமிழகம் முழுவதிலும் வரவேற்பு பெருகியது. இதனை சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சியான திமுக முதலமைச்சர் கண்ணும் கருத்துமாய் பார்த்து பார்த்து செய்தாலும் அதிலும் குறை கண்டுபிடிக்க தொடங்கியது.ஆனால் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாத முதலமைச்சர் மக்கள் நலனில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

 

தேர்தல் நெருங்கி வந்துவிட்ட காரணத்தால், தற்சமயம் அரசு அதிகாரிகளிடம் சென்று விட்டது. ஆகவே தற்போது தொற்றின் அலை இரண்டாம் நிலை வேகமாக பரவி வருகிறது. தற்போது அதன் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு முதலமைச்சர் மீண்டும் வருவாரா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகவே விரைவில் வரவிருக்கும் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.