Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

யாருக்கு இ-பாஸ், கொரோனா பரிசோதனை? – பயணம் குறித்து அரசு வெளியிட்டுள்ள முக்கிய விதிமுறைகள்

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அறிவித்ததையடுத்து ஊருக்குள் பயணிக்கவே இ-பாஸ் அவசியம் என்ற முறையை தமிழக அரசு அறிமுகம் செய்தது.

திருமணம், மருத்துவ அவசரம், இறப்பு போன்றவற்றில் பங்கேற்க இ-பாஸ் பெற வேண்டும் என பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஊரடங்கின் போதும் இதில் சில தளர்வுகளை ஏற்படுத்திய தமிழக அரசு தற்போது உள்ளூருக்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என அறிவித்திருந்தது.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் 5ம் கட்ட ஊரடங்கில் பேருந்துகளை இயக்க முடிவு செய்த தமிழக அரசு, 8 மண்டலங்களாக பிரித்து அரசாணை வெளியிட்டு, எந்தெந்த மண்டலத்தில் பேருந்து இயக்கலாம் என்ற விதிமுறை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் மாநிலத்திற்குள் ஒரு மண்டலத்திலிருந்து பிற இடங்களுக்குச் செல்பவர்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து திரும்புவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு மண்டலம் அல்லது மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்குள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சொகுசு வாகனங்கள், பேருந்துகள் அல்லது ரயிலில் பயணிப்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதுப்போக்குவரத்து திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், மாநிலத்திற்குள் ஒரு மண்டலத்திலிருந்து பிற இடங்களுக்குச் செல்பவர்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து திரும்புவார்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது

அதன்படி, ஒரு மண்டலம் அல்லது மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களுக்குள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சொகுசு வாகனங்கள், பேருந்துகள் அல்லது ரயிலில் பயணிப்பவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மண்டலத்திலிருந்து பிற மண்டலங்களுக்குச் செல்பவர்கள் இ-பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கொரோனா அறிகுறி உடன் வருபவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தலாம். சென்னை மண்டலத்திலிருந்து பிற இடங்களுக்கு செல்பவர்கள் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.

தொற்று இல்லாத நபர்களை வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் பணம் செலுத்தி அரசின் தனிமை முகாம்களில் தங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வர்த்தக நோக்கில் பயணம் செய்து 48 மணி நேரத்திற்குள் திரும்பக் கூடியவர்களைத் தனிமைப்படுத்தத் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு பிற மாநிலங்களிலிருந்து ரயில், விமானம் மூலம் வருபவர்கள் இ-பாஸ் வைத்திருக்க வேண்டிய நிபந்தனை தொடரும். தொற்று பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். தொற்று இல்லாவிட்டால் வீட்டிலோ அல்லது அரசு தனிமை முகாம்களில் பணம் செலுத்திவிட்டோ 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.பிற மாநிலங்களிலிருந்து வருபவர்களில் அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனை நடத்தலாம் என்றும், 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version