Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை: காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை

டி.என்.சேஷனுக்கு அறிவாலயத்தில் சிலை: காங்கிரஸ் பிரமுகர் கோரிக்கை

சென்னையில் நேற்றிரவு முதுமை மற்றும் உடல்நலக்கோளாறால் காலமான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என் சேஷன் அவர்களுக்கு சென்னையில் உள்ள திமுக தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்றிரவு காலமான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்

இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் அவர்கள் டி.என்.சேஷனுக்க்கு அஞ்சலி செலுத்திவிட்டு அதன்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “1996ம் வருடம் தமிழ் மாநில காங்கிரஸ் தனியாக பிரிந்த நேரம், தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு அந்த கட்சிக்கு சின்னம் கொடுத்து அங்கீகரித்தவர் டி என் சேஷன் அவர்கள் தான்

அதேபோல் வைகோவின் மதிமுக பிரிந்த போது, திமுக கட்சி சின்னம் முடக்கப்பட்ட பொது அதை காப்பாற்றி உதவி செய்தவர் இதே டி.என். சேஷன். எனவே அவருக்கு பெரும் நன்றிக் கடன் பட்டுள்ள திமுக, அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று கூறினார். கராத்தே தியாகராஜனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version