TN TRB தேர்வுகள் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. இந்த பணிக்கு 1508 காலி பணியிடங்கள் நிரப்பப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற இந்த தேர்வானது பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டனர். அந்த வகையில் தேர்வை ரத்து செய்து அதற்கான மறுத்தேர்வு அக்டோபர் 28ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறும் என்று கூறியிருந்தனர். அந்த அறிவிப்பை வெளியிட்டதும் அந்த தேர்வை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்த நிலையில் தேர்வு எழுதுவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதனையடுத்து தேர்வு மையங்களின் பட்டியலும் வெளிவந்தது. அவ்வாறு வெளிவந்த மையங்கள் தேர்வு எழுதுபவர்களின் வீட்டின் அருகில் இல்லாமல் 300 முதல் 450 கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் வட மாவட்டங்களில் தேர்வெழுத உள்ளவர்கள் தென் மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் வட மாவட்டங்களிலும் என தற்பொழுது தேர்வு மையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதுபவர்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து செலவும் மற்றும் அலைச்சலும் உண்டாகும்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் கூறியதாவது,சென்ற முறை நடைபெற்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடந்து இருப்பதால் இந்த முறை நீண்ட தொலைவுக்கு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனங்களும் தேர்வு வாரிய அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் செய்த தவறாகும் சென்ற முறை ஒரே கேள்விகள் நடைபெற்றது. மேலும் வெகுதொலைவில் தேர்வு மையங்கள் அமைந்திருப்பதால் தேர்வு எழுதுபவர்களுக்கு மிகுந்த அலைச்சல் ஏற்படும் என்று பலர் கூறிவந்தனர்.
பலரின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் மாதம் 28 மற்றும் 31 ம் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு எழுதுபவர்களின் கோரிக்கையை ஏற்று தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.