தமிழ்நாட்டில் நாளை (ஜன.28) முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது எனவும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில், டிசம்பர் முதல் அமலுக்கு வந்திருந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று தளர்த்தியுள்ளது.
முன்னதாக, மாநிலம் முழுவதும் நிலவும் கோவிட் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து, தற்போதுள்ள தளர்வுகள் இந்த மாதத்துடன் முடிவடையும் என்பதால், திருத்தப்பட்ட தளர்வுகளை அரசு வெளியிட்டது.
தமிழ்நாட்டின் லாக்டவுன் குறித்த புதிய அறிவிப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்:
1) தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்படும்.
2)மழலையர் ப பள்ளிகளுக்கு மீண்டும் திறப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
3) சமூக, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
4) ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு ஜனவரி 31 முதல் நீக்கப்படுகிறது.
5) உணவகங்கள், பேக்கரிகள், லாட்ஜ்கள், திரையரங்குகள், ஆடை மற்றும் நகைக்கடைகள், கிளப்புகள், ஜிம்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (நீர் விளையாட்டுகள் தவிர), ஸ்பாக்கள் மற்றும் சலூன்கள் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் செயல்படும்.
6) திருமணத்திற்கு 100 பேருக்கு மேல் அனுமதி கிடையாது , இறுதிச் சடங்குகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்..