Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அரசு பணிக்கான தேர்வில் தமிழ் புறக்கணிப்பு! அச்சத்தில் மாணவர்கள்! கவனத்தில் கொள்ளுமா மாநில அரசு?

TANGEDCO

TANGEDCO

அரசு பணிக்கான தேர்வில் தமிழ் புறக்கணிப்பு! அச்சத்தில் மாணவர்கள்! கவனத்தில் கொள்ளுமா மாநில அரசு?

கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 01ல் நடத்திய குரூப்-4 தேர்வில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் மத்தியில் மிகுந்த மன உலைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே கடந்த மாதம் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் கலை அறிவியல் பட்டப்பிரிவில் பட்டம் பயின்ற மாணவர்களிடம் இருந்து ACCESSOR என பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.இதில் காலிப்பணியிடங்கள் 1300 என்றும் தேர்வுக் கட்டணமாக ரூபாய் 1000+GST எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் தேர்வு எந்த மொழியில் நடைபெறும் என்பதை தெளிவாக விளக்கவில்லை.அதில் ஒரு சில பகுதிகள் மட்டுமே தமிழில் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 100 கேள்விகள் கொண்ட தேர்வில் 20 கேள்விகள் மட்டுமே தமிழில் இடம்பெறும் என்றும் மீதமுள்ள 80 கேள்விகள் ஆங்கிலத்திலும் இடம் பெறப்போகிறதோ என்ற எண்ணம் தேர்வர்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுவரை தமிழக அரசால் நடைபெறும் எந்த தேர்வும் தமிழ் இல்லாமல் நடைபெறாத நிலையில் முதல் முறையாக தமிழை தவிர்த்து ஆங்கிலத்தில் தேர்வு நடத்த காரணம் என்ன என்றும்?

சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு தமிழில் நடைபெற வேண்டும் என குறள் கொடுத்த பல தமிழ் உணர்வாளர்களும் அரசியல் கட்சிகளும் தமிழ் வழி பயின்ற மாணவர்களுக்கு இழைக்கும் இந்த அநீதிக்கு எதிராக பேசாதது மற்றும் குரல் கொடுக்காதது ஏன் என்றும் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை சமூகவளைய தளங்களில் பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

இது குறித்து தமிழக அரசு பரிசித்து தமிழக மாணவர் நலன் கருதி தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்பதே அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Exit mobile version