TNPSC குரூப் 4 தேர்வானது தமிழகத்தில் உள்ள 9,491 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
TNPSC தேர்வானது தமிழகம் முழுவதும் ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை 15,91,429 லட்சம் பேர் எழுதிய நிலையில் இதற்கான காலி பணியிடங்கள் 559 என உயர்த்தப்பட்டு மொத்த காலி பணியிடங்கள் 9,491 என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 28ஆம் தேதி அன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேர்ச்சி ஆனவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி 22ஆம் தேதி தொடங்கி மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை அறிய டிஎன்பிஎஸ்சி உடைய இணையதளமான https://www.tnpsc.gov.in/document/Counselling/01_2024_GROUP_IV_PCV_PUBL_20250108.pdf என்பதன் மூலம் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்த விவரங்களை அறிவதற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தை