தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பது என்னவென்றால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் படி தடுப்பூசி கிடங்கு ஊழியர் பணியில் 30 பேரும், புள்ளியில் உதவியாளர் பணிகளில் 2 பேரும், புள்ளியியலாளர் பணிகளில் 161 பேர் என 193 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது . வரும் நவம்பர் 19 தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது`
மேலும், 9ம் தேதி ஜனவரி மாதம் எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் தாள் தேர்வு 3 மணி நேரம் 300 மதிப்பெண்களுக்கு காலையிலும், 2ம் தாள் 2 மணி நேரம் 2௦௦ மதிப்பெண்களுக்கு மாலையிலும் என 500 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது. இதில், இட ஒதுக்கீடு பிரிவினர்கள் 150 மதிப்பெண்களும், பிற வகுப்பினர் 200 மதிப்பெண்களும் பெற வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.