Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாண்டஸ் புயல் எதிரோலி : நாளை நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு..

மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் நிலைகொண்டுள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இருந்து இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் கரையை கடக்கும் நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாது என அரசு தெரிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சென்னை பல்கலைகழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள், அண்ணாபல்கலைகழம் உறுப்பு கல்லூரிகள் ஆகியவற்றில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது. இந்நிலையில், நாளை வனத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுகள் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version