Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு

க்டோபர் 30 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள துணை ஆட்சியர் (18), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் (13), வணிக வரி உதவி ஆணையர் (25), மற்றும் 7 ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 30-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

 

இந்நிலையில் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version