Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாளை நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2 மெயின் தேர்வுகள்!  

#image_title

நாளை நடைபெற இருக்கும் டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2 மெயின் தேர்வுகள்! 

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நாளை பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநில அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி  தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

2022ம் ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகளுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற்றது.

தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டன. தேர்வுக்காக 323 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. நவம்பர் மாதம் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55 ஆயிரம் பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர்

இந்நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நாளை பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. முதல்நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் எழுத உள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மாலை என இரு வேளைகளில் தேர்வு நடைபெற உள்ளது.

 

 

Exit mobile version