TNPSC குரூப் 2,2A தேர்வு முடிவுகள் வெளியீடு!! முதல் முறையாக 57 நாட்களில் வந்த அதிசயம்!!

0
81
TNPSC Group 2,2A Exam Results Released!! The miracle that came for the first time in 57 days!!

TNPSC தேர்வு நடத்தப்பட்டு 57 நாட்களில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகள். நேற்று TNPSC குரூப் 2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

தேர்வின் நோக்கம் :-

குரூப் 2 தேர்வு மூலம் சுமார் 61 வகையான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியான அறிவிப்பில், 2,327 காலி பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 2.50 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகளை பார்வையிடும் வழிமுறைகள் :-

✓ https://tnpscresults.tn.gov.in/ அல்லது https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

✓ அதில், குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஆகிய இரண்டு இணைப்புகள் தோன்றும்.

✓ அதை க்ளிக் செய்து, தனித்தனியாகத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

குறிப்பு :-

முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், டிசம்பர் 18ஆம் தேதிக்குள் முதன்மைத் தேர்வுக் கட்டணமான ரூ.150 தொகையை இணையம் மூலம் செலுத்த வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்த விவரங்களை அறிந்துக்கொள்ள https://www.tnpsc.gov.in/ என்ற அரசின் இணையதள சேவையை பயன்படுத்தவும்.