Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வர்களுக்கு இன்று வெளியான முக்கிய அறிவிப்பு.!!

தமிழகத்தில் அரசு துறைகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சு போன்ற 7 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகள் அதே ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், இதற்கான பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக உயர்த்தப்பட்டது.

இதனையடுத்து, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை கிராம நிர்வாக இளநிலை உதவியாளர் மற்றும் வரி வசூலிப்பவர் போன்ற பணிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அந்த கலந்தாய்வில் மொத்தம் 6007 பணியிடங்களில் 5798 ஆகிய பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது. இதில் இளநிலை உதவியாளர் 250 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது.இந்த கலந்தாய்வில் தட்டச்சர் பணிக்கான 221 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மேலும், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணிக்கான 430 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணிகளுக்கு இன்றும் நாளையும் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் மறு வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version