TNPSC:குரூப்-4ல் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை சமர்பிக்க TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 15.8 லட்சம் தேர்வர்கள் எழுதி இருந்தார்கள். மொத்தம் 8,932 எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களை அறிவித்து இருந்தது TNPSC தேர்வாணையம்.
இந்த தேர்வு நடைபெற்று நான்கே மாதத்தில் தேர்வு முடிவுகள் அதாவது அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி வெளியிட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டிற்கான TNPSC Annual Planner 2025 வெளியீடு அறிவிப்பு வழங்கியுள்ளது .
இதில் TNPSC நடத்தும் குரூப் 1,2,4 தேர்வுகளின் கால அட்டவணையை வழங்கி இருக்கிறது. வரும் 2025 ஆம் ஆண்டில் குரூப் 4 தேர்வுகள் ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்றும் , எனவே குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் 25 ல் வெளியாகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளது TNPSC தேர்வாணையம்.
மேலும் குரூப்-4ல் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ் சமர்பிக்க TNPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது கணினி விழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஆவண சமர்பிப்பு நவம்பர் 9 முதல் 21ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தேர்வாணைய இணைய தளத்தின் ஒரு முறை பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக குறுகிய காலகட்டத்தில் தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சட்ட மன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் அடுத்த ஆண்டு வர உள்ளதால் மிக விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது TNPSC தேர்வாணையம்.