Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாழ்நாளில் மூட்டு வலி முதுகு வலி தொந்தரவு வராமல் இருக்க.. காலையில் இதை குடிங்க!!

இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை மூட்டு வலி,முதுகு வலி,கை கால் வலி போன்ற பிரச்சனைகளை அனுபவித்து வருகின்றனர்.எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க ராகி உள்ளிட்ட பொருட்களை கொண்டு பானம் தயாரித்து காலை நேரத்தில் பருகி வாருங்கள்.

மூட்டு வலிக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் இந்த பானத்தை பருகி வந்தால் சீக்கிரம் அதில் இருந்து மீண்டுவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ராகி – 50 கிராம்
2)ஆப்பிள் – ஒன்று
3)தாமரை விதை – 20 கிராம்
4)பேரிச்சம் பழம் – ஐந்து
5)காய்ச்சாத பசும் பால் – ஒரு கிளாஸ்
6)பாதாம் பருப்பு – நான்கு
7)ஏலக்காய் – ஒன்று
8)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் 50 கிராம் அளவிற்கு ராகி எடுத்து தண்ணீரில் அலசி வெயிலில் நன்றாக காயவைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஜல்லடை கொண்டு சலித்து எடுக்க வேண்டும்.

3.பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 20 கிராம் அளவிற்கு தாமரை விதை போட்டு மிதமான தீயில் வறுத்து ஆற வைக்க வேண்டும்.

4.அதன் பின்னர் ஒரு முழு ஆப்பிளை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி தோல் நீக்கிகொள்ளவும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

5.பின்னர் கிண்ணம் ஒன்றை எடுத்து அரைத்த ராகி மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் கரைத்த ராகி மாவை அதில் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பின்னர் ராகி கூழை நன்றாக ஆறவைக்க வேண்டும்.

6.இப்பொழுது மிக்சர் ஜார் எடுத்து தாமரை விதயை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஆப்பிள் துண்டுகள்,பேரிச்சம் பழத்தை அதில் போட வேண்டும்.பின்னர் நான்கு பாதாம் பருப்பு,ஒரு ஏலக்காயை போட்டு பால் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.

7.பின்னர் ராகி கூழை அதில் ஊற்றி நன்றாக அரைத்து ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருக வேண்டும்.இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி பிரச்சனையே வாழ்நாளில் வராது.

Exit mobile version