ஆயுசுக்கும் மலட்டு தன்மை பிரச்சனை ஏற்படாமல் இருக்க.. ஒரே ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிடுங்கள்!!

0
111
To avoid life-long infertility problem.. eat only one banana!!

ஆண்களின் மலட்டு தன்மை பாதிப்பை சரி செய்யும் மருந்தாக செவ்வாழை திகழ்கிறது.மற்ற வாழைப்பழத்தை விட செவ்வாழையில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது.

செவ்வாழையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

இரும்பு,மெக்னீசியம்,நார்ச்சத்து,பொட்டாசியம்,பீட்டா கரோட்டின்,துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை,சிறுநீரக கல் பாதிப்பு விரைவில் குணமாகிவிடும்.

செவ்வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை சுத்திகரிக்கும் வேலையை செவ்வாழை செய்கிறது.செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பிரச்சனை குணமாகும்.செவ்வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிப்பதோடு மலட்டு தன்மையை போக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

1)செவ்வாழைப்பழம் ஒன்று
2)முந்திரி பத்து
3)காய்ச்சாத பால் ஒன்றரை கிளாஸ்
4)கற்கண்டு ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கனிந்த செவ்வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு சதைப்பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் பசும் பால் சேர்த்து குறைந்த தீயில் சூடாக்க வேண்டும்.

இதனிடையே ஒரு மிக்சர் ஜாரில் செவ்வாழைப்பழத் துண்டுடன் 10 முந்திரி பருப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த செவ்வாழை பேஸ்டை சூடாகி கொண்டிருக்கும் பாலில் போட்டு சிறிது கற்கண்டு சேர்த்து பாலை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பால் பச்சை வாடை நீங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை இறக்க வேண்டும்.இந்த பாலை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி பருகவும்.இது ஆண்மை சம்மந்தபட்ட பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வாக விளங்குகிறது.