கே .எஸ். அழகிரி கேட்ட அந்தக் கேள்வி! பதில் சொல்ல இயலாமல் விழித்த மத்திய அரசு!

0
109

புதிதாக கட்டப்பட இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, கொரோனா தொற்றிற்கு பின்னர் மத்திய அரசு திடீரென்று அறிவித்திருக்கின்ற 20 லட்சம் கோடி தொகுப்பு நிதி தொடர்பாக சமீபகாலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுதப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த இருக்கின்ற பதில் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு நிதியிலிருந்து 300000 கோடி ரூபாய் நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கின்றது என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.

சென்ற 4ஆம் தேதி சிறு ,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் 80 லட்சத்து 93 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூபாய் 2.05 லட்சம் கோடி செலுத்துவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனாலும் 40 லட்சத்து 49000 வங்கி கணக்குகளில் ரூபாய் 1.5 8 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடனாக செலுத்தப்பட்டு இருக்கின்றன இந்த நிலையிலே, முன்னரே நமக்கு நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும் நிலையில், 20000 கோடி ரூபாய் செலவில் புதியதாக நாடாளுமன்றம் கட்டுவதற்கான அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் கே. எஸ் .அழகிரி.

அதோடு அழகான நாடாளுமன்ற வளாகத்தையே காட்சி பொருளாக்குகின்ற முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டிருக்கிறார். இதனை கவனிக்கும் போது துக்ளக்கின் ஆட்சிதான் நினைவிற்கு வருகின்றது என்று தெரிவித்திருக்கின்றார் கே. எஸ். அழகிரி.