90 வயதிலும் எலும்பு இரும்பு போன்று வலுவாக இருக்க.. இந்த ஒரு பொருளில் டீ போட்டு குடிங்க!!

0
200

வயதான பிறகு அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை எலும்பு தேய்மானம்.தற்பொழுது இளம் தலைமுறையினரும் மூட்டு வலி,எலும்பு தேய்மானம்,முதுகு வலி,முழங்கால் வலி போன்றவற்றை சந்தித்து வருகின்றனர்.இதில் இருந்து மீள்வதற்கான சிறந்த வீட்டு வைத்தியம் இங்கு தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை – ஒரு கப்
2)தேன் – ஒரு டேபிள் ஸ்பூன்
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

*முதலில் பிரண்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

*பிறகு இதை வெயிலில் பரப்பி நன்றாக காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிரண்டை துண்டுகள் நன்கு காய்ந்த பிறகே அதை பயன்படுத்த வேண்டும்.

*இப்பொழுது காய வைத்துள்ள பிரண்டை துண்டுகளை பாட்டிலில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.

*பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.தண்ணீர் கொதி வரும் தருணத்தில் பிரண்டை துண்டுகள் நான்கு அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இப்படி செய்ய பிடிக்காதவர்கள் பிரண்டையை பொடித்து பயன்படுத்தலாம்.

*பிரண்டை தேநீர் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் ஆறவைக்க வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு வடித்து சிறிதளவு தேன் கலந்து பருக வேண்டும்.

*இந்த பிரண்டை தேநீர் உடல் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.இளம் வயதில் இருந்தே இந்த பிரண்டை தேநீர் பருகி வந்தால் முதுமை காலத்தில் எலும்பு தேய்மானம்,மூட்டு வலி,கை கால் வலி போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

*பிரண்டை தேநீர் போன்று முடக்கத்தான் கீரையில் தேநீர் செய்து பருகி வந்தால் வலுவிழந்த எலும்புகள் வலிமைபெறும்.

*அதேபோல் எலும்புகளை வலுவாக்கும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.ராகி,கம்பு,கருப்பு உளுந்து போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.ராகி கூழ்,கருப்பு உளுந்து லட்டு,கருப்பு உளுந்து கூழ்,ராகி லட்டு,ராகி களி போன்றவை உடலுக்கு தெம்பூட்டும் உணவுகளாகும்.