இன்றைய காலத்தில் பல்வேறு காரணங்களால் ஒரு பெண் கருத்தரிப்பது தாமதமாகிறது.அனைவராலும் ஒரு முறை உடலுறவில் ஈடுபட்டு கருத்தரிக்க முடியாது.அவரவர் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை பொறுத்து கருத்தரித்தல் எளிது அல்லது கடினம் என்று மாறுகிறது.
தம்பதியரின் ஊட்டச்சத்து குறைபாடு,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை,ஹார்மோன் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் கருத்தரித்தல் தாமதமாகிறது.பெண்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க எந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.
பெண்கள் தங்களது மாதவிடாய் முடிநது அடுத்த 14வது நாளில் உடலுறவு கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும்.மாதவிடாய் முடிந்து 16,18 ஆவது உடலுறவில் ஈடுபடுவது வேகமாக கருத்தரிக்க உதவும்.மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபடும்.சிலர் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திப்பார்கள்.சிலர் 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி சந்திப்பார்கள்.
அதேபோல் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிடாய் சுழற்சி நாட்கள் வேறுபடும்.சிலருக்கு 3 நாட்களில் மாதவிடாய் முடிந்து விடும்.சிலருக்கு 5 அல்லது 7 நாட்கள் வரை நீடிக்கும்.இதனால் பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியை நன்கு அறிந்து அதற்கு ஏற்றார் போல் தங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
கருத்தரிக்க நினைக்கும் தம்பதியர் கடைபிடிக்க வேண்டியவை:
1)உடல் எடையை பராமரிப்பது அவசியமாகும்.
2)ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
3)உடலை நீர் ஏற்றத்துடன் வைத்திருப்பது அவசியமாகும்.
4)உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.