Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மலத்துடன் இரத்தம் வெளியேறுவது கட்டுப்பட.. இதை 3 வாரங்கள் தொடர்ந்து செய்யுங்கள்!!

இன்று பலருக்கு மலம் கழிப்பதே பெரும் சிக்கலாக இருக்கின்றது.நார்ச்சத்து குறைபாடு,தமரற்ற உணவுகள் போன்றவற்றால் மலச்சிக்கல் உண்டாகி அவை நாளடைவில் பைல்ஸாக மாறிவிடுகிறது.

ஆசனவாய் பகுதியில் சதை வளர்தல்,மலம் கழிக்கும் பொழுது எரிச்சல்,இரத்தத்துடன் மலம் வெளியேறுதல்,மலம் கழிப்பதில் சிரமம் போன்றவை பைல்ஸ் பாதிப்பிற்கான அறிகுறிகளாகும்.இந்த பைல்ஸை மூலம் என்று அழைப்பார்கள்.உள்மூலம்,வெளி மூலம்,பௌத்திரம் என்று 21 வகையான மூல நோய் பாதிப்பு இருக்கின்றது.

பைல்ஸ் அறிகுறிகள்:

1)மலத்தில் இரத்தம் தென்படுத்தல்
2)ஆசனவாய் வீக்கம்
3)மலக்கட்டு
4)மலம் கழித்த பின்னர் அரிப்பு,எரிச்சல் உணர்வு
5)மலம் கழிக்கும் பொழுது வலி
6)முக்கி முக்கி மலம் கழிக்கும் உணர்வு
7)ஆசனவாய் பகுதியில் சீழ்

பைல்ஸ் பாதிப்பு குணமாக உதவும் எளிய வீட்டு வைத்தியம்:

தீர்வு 01:

*துத்திக் கீரை
*சின்ன வெங்காயம்
*விளக்கெண்ணெய்
*பூண்டு

துத்திக் கீரையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு பத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு இடித்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் வாணலி வைத்து சிறிதளவு விளக்கெண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள துத்திக் கீரை,சின்ன வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.

தீர்வு 02:

*துத்திக் கீரை
*சீரகம்
*தயிர்

முதலில் ஒரு கைப்பிடி துத்திக் கீரையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.அடுத்து ஒரு கிண்ணத்தில் கெட்டியான தயிர் ஊற்றி துத்திக்கீரை சாறு மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் பாதிப்பு குணமாகும்.

தீர்வு 03:

*சின்ன வெங்காயம்
*துத்தி கீரை
*நெய்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளவும்.பிறகு நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கி நெயில் போட்டு வதக்க வேண்டும்.

பின்னர் சிறிது துத்தி கீரையை அதில் போட்டு வதக்க வேண்டும்.துத்தி கீரை நன்கு வதங்கிய பிறகு சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

Exit mobile version