Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெயில் காலத்தை சமாளிக்க.. இனிமேல் இந்த வகை ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!!

தற்பொழுது சம்மர் கொஞ்சம் எட்டி பார்க்கத் தொடங்கியிருக்கிறது.இன்னும் முழுமையான கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி எடுக்கத் தொடங்கிவிட்டது.இந்த வெயில் காலத்தை சமாளிக்க பலரும் குளிர்பானங்கள்,இளநீர்,சர்பத் போன்ற திரவங்களை எடுத்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து விற்கப்படும் ஆரஞ்சு,மாம்பழம் போன்ற ஜூஸ்களை குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி குடிக்கின்றனர்.இந்த ஜூஸ் ஆரோக்கியமானது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.இதுபோன்ற குளிர்பானங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.எனவே கோடை காலத்தை சமாளிக்க ஆரோக்கியமான நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

கோடை வெயிலை சமாளிக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய திரவ ஆகாரங்கள்:

**மோர்
**தர்பூசணி சாறு
**வெள்ளரி சாறு
**இளநீர்
**நன்னாரி பானம்
**பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சாறு
**தண்ணீர்
**கற்றாழை ஜூஸ்
**வெந்தய தண்ணீர்

இதுபோன்ற உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திரவ ஆகாரங்களை எடுத்துக் கொண்டால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.நீங்கள் பழங்களை கொண்டு தயாரிக்கும் ஜூஸில் இனிப்பு சுவை சேர்க்காமல் எடுத்துக் கொள்வது நல்லது.

ஐஸ்கட்டிகள்,குளிர்ந்த தண்ணீர் போன்றவற்றை பயயன்படுத்தி ஜூஸ் செய்து பருகுவதை தவிர்க்க வேண்டும்.மண் பானையில் நீர் ஊற்றி பருகினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.உடல் வறட்சி ஆகாமல் நீரேற்றத்துடன் இருக்க இது போன்ற திரவ ஆகாரங்களை எடுத்துக் கொள்வது நல்லது.அதிக குளிர்ச்சி நிறைந்த ஐஸ் தண்ணீரை பருகினால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.அதேபோல் சர்க்கரை சேர்த்த பானங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.எனவே ஆரோக்கியமான பானங்களை மட்டும் பருகி உடலை வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்.

Exit mobile version