குதிகால் வலி குணமாக.. ஜஸ்ட் 5 வில்வ இலையை நெருப்பில் சுட்டு இப்படி பயன்படுத்துங்கள் போதும்!!

0
77
Kuthikal vali kunamaka tips in Tamil

பெண்கள் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்று குதிகால் வலி.நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் குதிகால் பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு நடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.குதிகால் வலிக்கு சிறந்த நிவாரணம் கீழே தரப்பட்டுள்ளது.

டிப்ஸ் 1:

தேவையான பொருட்கள்:

1)அரிசி தவிடு

2)உப்பு

செய்முறை விளக்கம்:

அடுப்பில் வாணலி வைத்து ஒரு கைப்பிடி அளவு அரிசி தவிடு சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுக்க வேண்டும்.

அரிசி தவிடு நன்றாக வறுபட்டு வந்ததும் ஒரு காட்டன் துணியில் கொட்டி மூட்டை போல் கட்டிக் கொள்ளவும்.இதை குதிகால் வலி உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுக்கவும்.

இந்த அரிசி தவிடு ஒத்தடத்தை தினமும் இரவு நேரத்தில் செய்து வந்தால் சீக்கிரம் குதிகால் வலி நீங்கிவிடும்.

டிப்ஸ் 2:

தேவையான பொருட்கள்:

1)நொச்சி இலை

2)நல்லெண்ணெய்

செய்முறை விளக்கம்:

சிறிதளவு நொச்சி இலை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள நொச்சி இலையை போட்டு மிதமான தீயில் நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.நொச்சி எண்ணெய் இளஞ்சூட்டு பக்குவத்திற்கு வந்ததும் குதிகால் வலிக்கு பயன்படுத்தவும்.இந்த நொச்சி எண்ணெய் குதிகால் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

டிப்ஸ் 3:

தேவையான பொருட்கள்:

1)வில்வ இலை

2)காட்டன் துணி

செய்முறை விளக்கம்:

5 முதல் 10 வில்வ இலையை நெருப்பில் போட்டு சுட்டு எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை சாம்பலாக்கி சூடாக இருக்கும் பொழுது காட்டன் துணியில் கொட்டி மூட்டையாக கட்டிக் கொள்ளவும்.பிறகு இதை குதிகால் மீது வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கிவிடும்.