Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலை முதல் பாதாம் வரையிலான பிரச்சனைகளை குணப்படுத்த.. இனி ப்ளூ தேநீர் குடிங்க!!

அழகு நிறைந்த சங்கு பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த சங்கு பூவில் தேநீர் செய்து குடித்து வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

சங்கு பூ தேநீர் நன்மைகள்:

**உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

**உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.

**முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.சங்கு பூவில் இருக்கின்ற பிளவனாய்டு சேர்மங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கிறது.

**இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை சங்கு பூ தேநீர் கட்டுப்படுத்துகிறது.கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள் சங்கு பூ தேநீர் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

**நுரையீரலில் தேங்கி கிடக்கும் கழிவுகள் அகல சங்கு பூ தேநீர் செய்து பருகலாம்.அலர்ஜி பிரச்சனையை இந்த பானம் சரி செய்கிறது.

**மூட்டு வலி பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.காச நோய்,கண் தொடர்பான நோய் பாதிப்புகளை சரி செய்கிறது.

சங்கு பூ தேநீர் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

1)சங்குப்பூ – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் நீங்கள் இரண்டு மூன்று சங்கு பூக்களை பறித்துக் கொள்ளுங்கள்.பின்னர் சங்குப்பூவின் இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பின்னர் சுத்தம் செய்த சங்குப்பூவை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.

இந்த சங்கு பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த பானம் லேசாக ஆறிய பிறகு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.

இந்த சங்கு பூ பானத்தை பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இந்த பானத்தில் இனிப்பு சுவைக்காக எதையும் சேர்க்க வேண்டாம்.

Exit mobile version