இளம் வயதில் ஏற்படும் தோல் சுருக்கத்தை சரி செய்ய.. இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!
மேனி பொலிவாக இருப்பவர்கள் மட்டுமே வயதானாலும் இளமை தோற்றத்துடன் காணப்படுவார்கள். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் இளம் வயதிலேயே தோல் சுருக்கம், தோல் அலர்ஜி, தோல் வியாதி, சரும வறட்சி உள்ளிட்ட சருமம் தொடர்பான பல நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது.
அழகு சாதன பொருட்களை சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்துதல், சத்து குறைபாடு, அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தோல் சுருக்கம் ஏற்படுகிறது. இளம்
வயதில் ஏற்படும் தோல் சுருக்கத்தை சரி செய்ய எளிய வழிகள்…
*பச்சை பயறு
*சந்தனம்
*ரோஜா இதழ்
இந்த மூன்று பொருட்களையும் சம அளவு எடுத்து வெயிலில் உலர்த்தி பொடியாக்கி… கெமிக்கல் பொருட்களுக்கு பதில் இதை தோலிற்கு பயன்படுத்தி வந்தால் தோல் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.
*தண்ணீர்
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடித்து வந்தால் தோல் சுருக்கம் இல்லாமல் மிருதுவாக இருக்கும்.
*பசும் பால்
*சந்தனம்
சுத்தமான பசும் பசும்பாலில் சந்தனக் கட்டையை அரைத்து சேர்த்து உடலுக்கு பூசி குளித்து வந்தால் தோல் சுருக்கம் ஏற்படாது.