நம் வீட்டில் செய்யும் சில தவறுகளால் பணக் கஷ்டம்,நிம்மதியின்மை போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.இன்றைய காலகட்டத்தில் வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக சிலர் பரிகாரம் செய்கின்றனர்.
பணக்கஷ்டம் நீங்க சிலர் வீட்டில் சிலர் பொருட்களை வாங்கி வைப்பார்கள்.குபேரன் சிலை,மீன் தொட்டி போன்றவற்றை வைப்பது போன்றவற்றால் கடன் தொல்லை நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல் வீட்டின் திசை பார்த்து சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்.வீட்டின் தெற்கு திசை கடன் பிரச்சனையை தீர்க்கும்.தென் திசையில் கற்றாழை,தென்னை,செம்பருத்தி போன்ற செடிகளை வைத்தால் நல்ல பலன் உண்டாகும்.
தென் திசையில் செடி வைப்பதால் வீட்டின் நிதி சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை தெற்கு திசை பார்த்தவாறு வைத்தால் அவற்றின் வரவு அதிகரிக்கும்.வீட்டை பெருக்கும் துடைப்பத்தை தெற்கு திசை பார்த்தவாறு வைத்தால் அனைத்து விதமாக எதிர்மறை எண்ணங்களும் நீங்கிவிடும்.தெற்கு திசையில் பணப் பெட்டியை வைத்தால் பணம் புரளும் என்பது நம்பிக்கை.எனவே கடன் பிரச்சனை பணக் கஷ்டம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ தெற்கு திசையில் இதுபோன்ற செயல்களை மேற்கொள்ளுங்கள்.