கரப்பான் பூச்சிகளை விரட்ட.. கெமிக்கல் மருந்து வேண்டாம்!! ஒரு பச்சை மிளகாய் போதும்!!

0
1116
To get rid of cockroaches.. no chemical medicine!! One green chili is enough!!

வீட்டிற்குள் நடமாடும் கரப்பான் பூச்சிகளின் நடமாட்டத்திற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க பச்சை மிளகாய் ஸ்ப்ரே பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

1)பச்சை மிளகாய் – ஒன்று
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
3)பூண்டு – இரண்டு பல்

செய்முறை விளக்கம்:

*முதலில் ஒரு பச்சை மிளகாய் எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

*பிறகு இதை ஒரு கிண்ணத்தில் போட்டு பாதியளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

*அடுத்து இரண்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பச்சை மிளகாய் வைத்துள்ள கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த நீரை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

*தண்ணீரில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சாறு இறங்கியதும் அந்நீரை வேறொரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

*அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் தெளித்து அதை கட்டுப்படுத்தலாம்.

*பச்சை மற்றும் பூண்டு பற்களை நறுக்கி தண்ணீரில் ஊற வைப்பதற்கு பதில் இரண்டையும் அரைத்து அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து அதில் தண்ணீர் கலந்து ஸ்ப்ரே செய்யலாம்.இரண்டில் எந்த மெத்தட் தங்களுக்கு வசதியாக இருக்கிறதோ அதையே தாங்கள் பின்பற்றலாம்.

*கடைகளில் விற்கும் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு கரப்பான் பூச்சிகளை எளிதில் விரட்டி விடலாம்.