Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

கர்மவினைகள் நீங்க மற்றும் காரிய தடைகள் அகல.. சனிக்கிழமையன்று விநாயகரை வழிபடுங்கள்..!

முக்தி கிடைக்காமல் பிறப்பிற்கு காரணமாக அமைவது அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் தான். பொதுவாக கர்மவினை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. என்னதான் நல்லது செய்தாலும் கெட்டது நடக்கிறது என்றால் செய்த கர்மவினை பயனை அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தமாகும். இது போன்ற கர்மவினை பாவங்களை குறைத்து கொள்ளவும் இதனால் ஏற்படக்கூடிய தடைகளை அகற்றவும் என்னென்ன செய்யலாம்?காண்க அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

கர்மா என்பது கெட்டது மட்டுமல்ல நல்லது செய்தாலும் அது பின் தொடரும். நல்ல கர்மவினை பயன்களையும் சேர்த்தே அனுபவித்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில் தொடர்ந்து தடைகள் ஏற்பட்டு கொண்டு இருந்தால் அதனை நீக்கக்கூடிய சக்தி கொண்டவர் விநாயகர் ஆவார். இவரை தொட்டு வணங்கி வழிபட்டால் எந்தவொரு காரியத்தை செய்தாலும் அதில் தோல்வி என்பதே இருக்காது.
இத்தகைய விநாயகரின் அம்சமாக விளங்கும் அரச இலை ஒன்றை பறித்து வைத்து அரச மரத்தடி விநாயகரை வழிபட்டால் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்கிற ஐதீகம் உண்டு. அதே போல அரச இலையை வைத்து செய்யப்படும் இந்த பரிகாரமும் வேண்டிய வேண்டுதல்களை அப்படியே நிறைவேற்றி தரும் அதீத சக்தி கொண்டுள்ளது.
ஒரு அரச மர இலையை நன்கு சுத்தம் செய்து விநாயகருக்கு முன்பாக ஒரு தாம்பூல தட்டில் வைத்து கொள்ளுங்கள். தாம்பூல தட்டு மற்றும் விநாயகருடைய அரச மர இலைக்கும் மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ளுங்கள். பின்னர் தாம்பூல தட்டு முழுவதும் வாசனை மிகுந்த உதிரி பூக்களால் அலங்கரித்து இலையின் மீது அகல் விளக்கு ஒன்றை வைத்து பொட்டிட்டு அலங்கரித்து நல்லெண்ணெய் ஊற்றி பின்னர் மஞ்சள் நிற பஞ்சு திரியால் தீபம் ஏற்றி வையுங்கள்.

பின்பு இதற்கு தீப ஆரத்தி காட்ட வேண்டும். மஞ்சள் நிற பஞ்சு திரி இல்லை என்றால் வெள்ளை நிற திரியை மஞ்சளில் தோய்த்து நன்கு உலர வைத்து தீபம் ஏற்றலாம். இந்த மஞ்சள் நிற திரியை பயன்படுத்தி சனிக்கிழமைகளில் விநாயகருக்கு தொடர்ந்து அரச இலையில் தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய பாவங்களும் நீங்கி காரிய தடைகள் அகன்று செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.மேலே குறிப்பிட்ட இந்த செயல்கள் நம் பாவங்களையும் நம் முன்வினைகளையும் போக்க கூடிய மிக சக்தி வாய்ந்த பரிகாரம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். முடிந்தளவு இவற்றை செய்து வர வாழ்வில் நல்ல மாற்றங்களும் கடவுளின் ஆசியும் பெறலாம்.நம்பிக்கை இருந்தால் நீங்கள் செய்து பாருங்கள் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

Exit mobile version