உடல் வலி அனைவருக்கும் ஏற்படக் கூடிய அன்றாட பாதிப்புகளில் ஒன்றாகும்.உடலில் மூட்டு,கை கால்,முதுகு போன்ற இடங்களில் அதிக வலி ஏற்படுகிறது.இந்த உடல் வலி பாதிப்பில் இருந்து மீள முருங்கை கீரை எண்ணையை சம்மந்தபட்ட இடத்தில் தடவுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை இலை – ஒரு கொத்து
2)விளக்கெண்ணெய் – 20 மில்லி
பயன்படுத்தும் முறை:-
முதலில் ஒரு கொத்து முருங்கை இலையை பறித்துக் கொள்ள வேண்டும்.அதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் இரும்பு வாணலி வைத்து 20 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள முருங்கை இலையை விளக்கெண்ணெய்யில் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
முருங்கை கீரை எண்ணையில் நன்றாக வதங்கி வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.அதன் பின்னர் காட்டன் துணியை எடுத்து அதில் முருங்கை கீரையை அதில் வைத்து மூட்டை கட்டிக் கொள்ள வேண்டும்.இதை உடலில் வலி உள்ள இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
உதாரணத்திற்கு மூட்டு பகுதியில் வலி இருந்தால் அவ்விடத்தில் இந்த மூட்டையை வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.இப்படி இரண்டு,மூன்று முறை ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கிவிடும்.
மற்றொரு தீர்வு:
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை கீரை – ஒரு கைப்பிடி
2)தண்ணீர் – சிறிதளவு
பயன்படுத்தும் முறை:-
ஒரு கைப்பிடி முருங்கை கீரையை முருங்கையை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் இரும்பு வாணலி வைத்து அரைத்த முருங்களோ கீரை விழுதை அதில் போட்டு வதக்க வேண்டும்.முருங்கை விழுதில் இருந்து தண்ணீர் சுண்டி வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இந்த முருங்கை கீரை பேஸ்டை லேசாக ஆறவைத்து உடலில் வலி காணப்படும் இடத்தில் பூச வேண்டும்.தலைவலி இருந்தால் இந்த முருங்கை இலை பேஸ்ட்டை நெற்றியில் பூசலாம்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை கீரை – 50 கிராம்
2)நல்லெண்ணெய் – 20 மில்லி
செய்முறை விளக்கம்:-
முருங்கை கீரையை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் விடமால் அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை இரும்பு சட்டியில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
முருங்கை பேஸ்ட் எண்ணையில் நன்கு கலந்து கொதிக்க வேண்டும்.பிறகு அடுப்பை ஆப் செய்துவிட்டு கலவையை நன்கு ஆறவிட வேண்டும்.
அதன் பிறகு ஒரு பாட்டில் மீது வடிகட்டி ஒன்றை வைத்து இந்த கலவையை அதில் வைத்து பிழிந்துவிட வேண்டும்.இந்த முருங்கை எண்ணெயை ஆறவைத்து வலி உள்ள இடத்தில் ஊற்றி தேய்த்தால் சரியாகும்.