நாம் நன்றாக சுவாசிக்க சுவாச நோய்கள் வராமல் இருக்க நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம்.நுரையீரலில் சளி,கிருமிகள் போன்றவை தேங்கி இருந்தால் மூச்சுத் திணறல்,ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.நுரையீரல் கழிவுகள் நீங்க இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
தீர்வு 01:
1)இஞ்சி
2)தேன்
3)தண்ணீர்
ஒரு கட்டை விரல் சைஸ் இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு தண்ணீரில் கழுவி எடுத்து உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சி சாறை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் சிறிது நேரம் நீர் தெளிந்த பின்னர் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருக வேண்டும்.இப்படி செய்து வந்தால் நுரையீரலில் தேங்கிய கழிவுகள் வெளியேறும்.நுரையீரல் ஆரோக்கியம் மேம்பட இஞ்சி சாறை அடிக்கடி செய்து குடிக்கலாம்.
தீர்வு 02:
1)கடுக்காய் பொடி
2)தேன்
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் பொடி சேர்த்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.
தீர்வு 03:
1)கரிசலாங்கண்ணி பொடி
2)தண்ணீர்
கரிசலாங்கண்ணி கீரையை பொடித்து கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிளாஸ் அளவு தண்ணீரை சூடாக்கி கரிசலாங்கண்ணி பொடி ஒரு தேக்கரண்டி அளவு கலந்து பருகினால் நுரையீரலில் தேங்கிய கழிவுகள் வெளியேறும்.
தீர்வு 04:
1)கற்பூரவல்லி இலை
2)வெற்றிலை
3)தேன்
கற்பூரவல்லி இலை மற்றும் வெற்றிலையை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து பருகினால் நுரையீரல் கழிவுகள் நீங்கும்.
தீர்வு 05:
1)தேன்
2)தண்ணீர்
ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து காலை நேரம் குடித்து வந்தால் நுரையீரல் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.