நம் வீட்டு கழிவறை மற்றும் குளியலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒரு விஷயமாகும்.ஆனால் சிலர் நீண்ட வருடங்களாக பாத்ரூமை பராமரிக்காமல் பயன்படுத்துகின்றனர்.இதனால் உப்பு கறை,மஞ்சள் கறை படிந்து அசுத்தமாக காணத் தொடங்குகிறது.
பாத்ரூமில் உள்ள கறைகள் அனைத்தும் நீங்கி சுத்தமாக இருக்க கீழ்கண்ட டிப்ஸை ட்ரை பண்ணுங்கள்.
ரெட் ஹார்பிக் – இரண்டு தேக்கரண்டி
வினிகர் – இரண்டு தேக்கரண்டி
வாஷிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
முதலில் பாத்ரூமில் தண்ணீர் ஊற்றி ஈரப்படுத்த வேண்டும்.பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு ரெட் ஹார்பிக்கை பாத்ரூம் முழுவதும் ஊற்றி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
அடுத்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு வினிகர் மற்றும் ஒரு தேக்கரண்டி வாஷிங் பவுடர் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.இதை பாத்ரூம் முழுவதும் ஊற்றி பிரஸ் கொண்டு தேய்க்கவும்.பிறகு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி பாத்ரூமை கழுவவும்.
இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் நீண்ட வருட உப்பு கறை மற்றும் அழுக்கு நீங்கிவிடும்.
1)டூத் பேஸ்ட் – ஒரு தேக்கரண்டி
2)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி
பல் துலக்க பயன்படுத்தும் டூத் பேஸ்ட் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டுக் கொள்ளவும்.அடுத்து ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை அதில் கொட்டி தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துவிடவும்.
பிறகு இதை பாத்ரூம் முழுவதும் ஊற்றி 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.அதன் பிறகு பிரஸ் கொண்டு பாத்ரூம் டைல்ஸை தேய்த்தால் கறைகள் நீங்கும்.
1)எலுமிச்சை தோல் – 10
2)வினிகர் – ஒரு தேக்கரண்டி
பத்து எலுமிச்சை தோலை வெயிலில் காயவைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த எலுமிச்சை பொடி சேர்க்கவும்.இதனுடன் ஒரு தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி பாத்ரூம் முழுவதும் ஊற்றி 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.பிறகு ஒரு பிரஸ் கொண்டு சுத்தம் செய்தால் பாத்ரூம் பளிச்சிடும்.