Government schools: அரசு பள்ளிகளில் ஆசிரியர் கல்வித்திறனை அதிகரிக்க பள்ளி கல்வி துறை இரண்டு புதிய குழுக்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் கல்வி திறன் குறைவாக உள்ளது என பெற்றோர்கள் நினைத்து தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்கின்றனர். இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது. அது என்னவென்றால் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் இரண்டு (whatsapp group) அமைத்து அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதில் விருப்பமுள்ள மற்றும் விருப்பம் இல்லாமல் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக இணைய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பிறகு ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் அந்த வாட்சப் குரூப்பில் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு பள்ளிகளின் பெயர் மற்றும் கல்வி தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது போன்ற சிறப்பான செயல்கள் திமுக ஆட்சியில் நடைபெறுகிறது என மக்கள் நினைக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்வால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.