Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூளை சுறுசுறுப்பாக இயங்க.. இந்த விஷயங்களை மார்னிங் டைமில் செய்யுங்கள்!!

குழந்தைகள் பெரியவர்கள் என்று அனைவருக்கும் மூளை செயல்திறன் அதிகமாக இருக்க
வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.நம் செயல்பாட்டிற்கு முக்கிய காரணமே மூளை தான்.இந்த மூளையின் செயல்திறனை அதிகரிக்க நாம் சில அடிப்படை விஷயங்களை அவசியம் செய்ய வேண்டும்.

உடலை மேம்படுத்த எப்படி உடற்பயிற்சி அவசியமானதாக இருக்கிறதோ அதேபோல் தான் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க பயிற்சிகள் அவசியமானதாக இருக்கிறது.ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களுடன் மேலும் சில விஷயங்களை செய்து வந்தால் நம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

நம் மூளை எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க நாம் எதையாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.யோசிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.

உணவு வகைகள் மூலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்க முடியும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்,முட்டை,பச்சை காய்கறிகள்,கீரைகள்,கொட்டை வகைகளை சாப்பிடுவதன் மூலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்கலாம்.

ஆழ்ந்த மூச்சு பயிற்சியில் ஈடுபடுங்கள்.தியானம் செய்வதன் மூலம் மனச்சோர்வு நீங்குவதுடன் மூளை திறன் அதிகரிக்கும்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கிய உணவுகள் மூளையை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.

காலையில் எழுந்ததும் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பதன் மூலம் மூளையை புத்துணர்வுடன் வைத்துக் கொள்ளலாம்.படித்தல்,எழுதுதல்,செய்தித்தாள் வாசித்தல் போன்ற செயல்முறைகள் மூலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்கலாம்.சிந்திக்க வைக்கும் விளையாட்டுக்கள் மூலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்கலாம்.

புதியவற்றை கற்றுக் கொள்வதன் மூலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்கலாம்.உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் புதிர்விளையாட்டுகளை விளையாடுங்கள்.

Exit mobile version