Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நல்ல உடல் நலத்துடன் 100 வயது வரை வாழ.. இந்த ட்ரிங்க் மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே நோய் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும்.இந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)வெந்தயம் – அரை தேக்கரண்டி
4)துளசி இலை – நான்கு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் சீரகம்,கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை வாணலியில் போட்டு சிறிது நேரம் வறுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை கல்வத்தில் போட்டு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் சிறிதளவு துளசி இலைகளை பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர்(250 மில்லி) தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

இரண்டு நிமிடங்களுக்கு பிறகு இடித்து வைத்துள்ள வெந்தய கலவையை கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள துளசி இலைகளை போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.

250 மில்லி பானம் 150 மில்லி வரும் வரை காய்ச்சி அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை சிறிது ஆறவைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகுங்கள்.இந்த நான்கு பொருட்கள் சேர்த்த பானம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)மருதம்பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

மருதம்பட்டை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.50 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு மருதம்பட்டை பொடி ஒரு தேக்கரண்டி அளவு கொட்டி கொதிக்க வைத்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)தயிர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

பசும் பாலில் தயிர் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அந்த தயிரில் எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

பிறகு இந்த மஞ்சள் பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Exit mobile version