Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க.. டாக்டர் சொன்ன இந்த டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க!!

இந்த காலகட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.தற்போதைய உணவு முறையை கவனமாக பின்பற்றினால் மட்டுமே உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.சரியான டயட்டை பின்பற்றா விட்டால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது கடும் சிரமமாக மாறிவிடும்.

சிலர் சீக்கிரமாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்ற ஆர்வக் கோளாறில் உணவை முழுமையாக தவிர்த்து ஆபத்தான டயட் முறையை பின்பற்றுகின்றனர்.நாம் செய்யும் சிறு சிறு தவறான பழக்கங்களாலும் உடல் எடை விரைவில் கூடிவிடுகிறது.

உடல் எடையை குறைக்க மருத்துவரின் டிப்ஸ்:

1)உங்களுக்கு டீ,காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் நிச்சயம் அது உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.டீ,காபியில் அதிகளவு சர்க்கரை சேர்த்துக் கொண்டால் உடல் எடை அதிகரிக்கும்.

சிலருக்கு டீ காபி குடிக்கும் பொழுது எண்ணெய் பண்டங்கள்,இனிப்புகள் உட்கொள்ளும் பழக்கம் இருக்கும்.இந்த பழக்கத்தை தொடர்ந்தால் நிச்சயம் உடல் எடை கூடும்.எனவே இனி டீ,காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.இதனால் எண்ணெய் பண்டங்கள் சாப்பிடும் பழக்கம் கட்டுப்படும்.

2)தினமும் காலை,மாலை 30 நிமிடங்கள் நடைபயிற்சி,எளிமையான உடற் பயிற்சி போன்றவற்றை செய்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.

3)காலை,மதியம் மற்றும் இரவு உணவுகளை சீக்கிரம் சாப்பிட பழகிக்கொள்ள வேண்டும்.அதிக எண்ணெய் சேர்த்து சமைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

4)பதப்படுத்தப்பட்ட உணவு,மிஞ்சிய உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.காலை நேரத்தில் காய்கறி,புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

5)இரவில் அசைவம் மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.தினமும் காலையில் எழுந்த உடல் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.வெது வெதுப்பான தண்ணீராக இருந்தால் இன்னும் சிறப்பு.

6)ஹோட்டல் உணவுகளை தவிர்த்துவிட வேண்டும்.தானியங்களை முளைகட்டி வைத்து சமைத்து சாப்பிடலாம்.

7)தங்கள் உடல் எடை குறைப்பில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்பதை தினந்தோறும் பரிசோதிக்க வேண்டும்.

Exit mobile version