Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தை புஷ்டியாக வளர.. குடிக்கும் பாலில் இந்த சத்து பவுடர் கலந்து கொடுங்க!!

உங்கள் குழந்தையின் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க நீங்கள் வீட்டிலேயே ஊட்டச்சத்து பவுடர் தயாரித்து பாலில் கலந்து குடிக்க வைக்கலாம்.இங்கு சொல்லப்பட்டுள்ள ஊட்டச்சத்து பவுடர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க,எலும்பு வலிமை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் ஊட்டச்சத்து பவுடர்:

பாதாம் பருப்பு – 100 கிராம்
முந்திரி பருப்பு – 100 கிராம்
வால்நட் – 50 கிராம்
பிஸ்தா – 50 கிராம்
முழு கோதுமை – 100 கிராம்
தாமரை விதை – 50 கிராம்
பாதாம் பிசின் – இரண்டு தேக்கரண்டி
பசும் பால் – ஒரு கப்
மிளகுத் தூள் – சிட்டிகை அளவு
மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
நாட்டு சர்க்கரை – தேவையான அளவு

முதலில் 100 கிராம் அளவிற்கு பாதாம் பருப்பு மற்றும் 100 கிராம் அளவிற்கு முந்திரி பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை இரும்பு வாணலியில் போட்டு குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.நல்ல வாசனை வந்ததும் இதனை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து 50 கிராம் வால்நட் மற்றும் 50 கிராம் பிஸ்தா பருப்பை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை பாதாம் பருப்பு தட்டில் கொட்டிவிட வேண்டும்.

அதன் பிறகு முழு கோதுமை,தாமரை விதை ஆகியவற்றை தனித் தனியாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைக்க வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் இந்த பொருட்களை போட்டு பவுடர் பக்குவத்திற்கு அரைக்க வேண்டும்.

இந்த சத்து பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி பாதாம் பிசின் போட்டு தண்ணீர் ஊற்றி நான்றாக ஊறவைக்க வேண்டும்.

அதன் பின்பு பாத்திரத்தில் ஒரு கப் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இரண்டு மிளகை தட்டி பாலில் போட வேண்டும்.அடுத்ததாக சிட்டிகை அளவு மஞ்சள் தூளை அதில் சேர்க்க வேண்டும்.பின்னர் தயாரித்து வைத்துள்ள சத்து பவுடர் இரண்டு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கிளாஸில் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதில் கொதிக்க வைத்த பாலை ஊற்றி இனிப்பு சுவைக்காக நாட்டு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்க உடல் எடை அதிகமாகும்.

Exit mobile version