Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெருங்குடல் கழிவுகள் முந்திகிட்டு ஆசனவாயில் வெளியேற.. இந்த பானத்தை காலை நேரத்தில் குடிங்க!!

மலக் குடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் மூலிகை பானம் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)கறிவேப்பிலை – நான்கு கொத்து

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து நான்கு கறிவேப்பிலை கொத்துக்களை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த ஜூஸை கிண்ணத்திற்கு வடிகட்டி 100 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி கலந்து பருகினால் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் மொத்தமும் வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை கொரகொரப்பாக இடித்து பாத்திரம் ஒன்றில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.இந்த இஞ்சி பானத்தை வடித்து எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து பருகினால் குடலில் தேங்கிய கழிவுகள் முற்றிலும் வெளியேறிவிடும்,

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)ஓமம் – ஒரு தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
4)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி ஓமம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

பிறகு அதில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் குடலில் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)கல் உப்பு – சிறிதளவு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
4)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பின்னர் சிறிதளவு கல் உப்பு சேர்த்து சூடாக்கி அடுப்பை அணைக்க வேண்டும்.

இந்த கல் உப்பு நீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு பிழிந்துவிட வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் குடல் கழிவுகள் வெளியேறும்.

Exit mobile version