தற்பொழுது பலரும் பல வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் விடுவதால் அவை செயலிழந்து போவதுடன் வங்கிகளில் கடன் பெற முடியாமல் போவதற்கு வழிவகை செய்வதாகவும் அமைந்துவிடுகிறது.
ஆனால் இந்த கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கியில் முன்கூட்டியே கடன் பெறவும் சம்பளத்திற்கு முன்பாக தங்களுடைய தினசரி செலவுகளை சமாளிப்பதற்கும் சிறந்த கடன் வரலாற்றை உருவாக்கவும் பயன்படுகிறது. ஒரு சிலர் இந்த கிரெடிட் கார்டுகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் விட்டு விடுவதால் அவை மூடப்பட்டு விடும்.
இவ்வாறு உங்களுடைய கிரெடிட் கார்டுகளை மீண்டும் இயக்குவதற்கு முதலில் கிரெடிட் கார்டை வழங்கக்கூடிய நிறுவனம் குறிப்பிட்ட நாட்களுக்கு மீண்டும் அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு மீண்டும் செயலிழந்த கிரெடிட் கார்டுகளை புதுப்பிப்பதற்கான அவகாசத்தினை வழங்கும். தருணங்களில் அவற்றை புதுப்பித்து கொள்ளலாம்.
அல்லது டோர் மேட் கிரெடிட் கார்டு மீண்டும் செயல்படுத்துவதற்கு உங்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய வங்கி கிளை அல்லது ஆன்லைன் சேவை போர்டலை நேரில் சென்று அணுகலாம். இவ்வாறு நேரில் செல்லும் பொழுது சில நேரங்களில் வங்கிகள் உங்களுடைய கேஒய்சி விவரங்களை கேட்கும். இந்த விவரங்களானது உங்களுடைய கிரெடிட் கார்டு உடன் புதுப்பிக்கப்பட்ட விவரங்களை இணைப்பதற்கான முறையாகும்.
மேலே கூறப்பட்ட இந்த இரண்டு வழிமுறைகளில் உங்களுடைய கிரெடிட் கார்டுகளை மீண்டும் செயல்படுத்த முடியும். உங்களுடைய கிரெடிட் கார்டுகள் செயலிழந்து இருந்தால் உடனடியாக மேலே குறிப்பிட்ட இரண்டு வழிகளின் மூலம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.