Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாடாய் படுத்தும் படர் தாமரை இனி படராமல் இருக்க.. பூண்டு தைலம் சீகைக்காய் யூஸ் பண்ணுங்க!! 100% ரிசல்ட் கிடைக்கும்!!

உடலில் அதிகம் வியர்த்தல்,இறுக்கமான உடை அணிதல் போன்ற காரணங்களால் படர் தாமரை ஏற்படுகிறது.இதை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:-

1)நல்லெண்ணெய் – 50 மில்லி
2)வெள்ளை பூண்டு பற்கள் – இரண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இதை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள வெள்ளைப்பூண்டு பற்களை அதில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

பூண்டு சாறு நல்லெண்ணெயில் நன்றாக கலக்கும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த எண்ணெயை ஆறவைத்து படர் தாமரை மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)மிளகு – ஒரு தேக்கரண்டி
2)நெய் – ஒன்றரை தேக்கரண்டி
3)சீகைக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் தாளிப்பு கரண்டியில் ஒன்றரை தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பின்னர் இடித்த மிளகுத் தூளை அதில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை ஆறவைத்து படர் தாமரை மீது அப்ளை செய்ய வேண்டும்.நன்றாக காய்ந்த பிறகு இதை சீகைக்காய் கொண்டு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.இந்த வைத்தியத்தை தினமும் செய்து வந்தால் படர் தாமரை பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜெல்லை தண்ணீரில் போட்டு பலமுறை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த ஜெல்லை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கற்றாழை பேஸ்டை படர் தாமரை மீது அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் குணமாகும்.

Exit mobile version