Blood Pressure: இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் இரத்த அழுத்த பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.பிளட் பிரஷர் உள்ளவர்கள் உணவில் உப்பு மற்றும் இனிப்பு அதிகளவு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.பிளட் பிரஷர் இருப்பவர்கள் முருங்கை கீரையை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முருங்கை கீரை பொடி:
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை இலை – ஒரு கப்
2)கருப்பு உளுந்து – ஒரு தேக்கரண்டி
3)கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
4)கறிவேப்பிலை – ஒரு கொத்து
5)வர மிளகாய் – இரண்டு
6)பூண்டு வற்றல் – இரண்டு
7)இந்துப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முருங்கை இலையை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் இரண்டு வெள்ளை பல் பூண்டு பற்களை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் கறிவேப்பிலை மற்றும் முருங்கை இலையை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.
அதன் பிறகு ஒரு தட்டில் இந்த இலைகளை கொட்டி ஆறவிட வேண்டும்.அடுத்து பூண்டு வற்றல் மற்றும் வர மிளகாயை மிதமான தீயில் வாசனை வரும் அளவிற்கு வறுக்க வேண்டும்.
பிறகு கடலை பருப்பு மற்றும் உளுந்து பருப்பை தனி தனியாக பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.
வறுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தும் நன்கு ஆறும் வரை காத்திருக்க வேண்டும்.பிறகு ஒரு மிக்சர் ஜாரை எடுத்து ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வறுத்து வைத்துள்ள முருங்கை இலை,கறிவேப்பிலை,வர மிளகாய்,பூண்டு பற்கள்,உளுந்து பருப்பு மற்றும் கடலை பருப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு சிறிதளவு இந்துப்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைக்கவும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து அரைத்த பொடி தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் ஜூஸ் பருகி வந்தாலும் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.இது தவிர மாதுளை சாறும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.