Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வலி நிவாரணி மருந்து இல்லாமல் கை மணிக்கட்டு வலியை குறைக்க.. இப்படி செய்யுங்கள்!!

அதிக எடை கொண்ட பொருட்களை தூக்குதல்,கண்ணி பயன்பாடு,எழுதுதல் போன்ற காரணங்களால் மணிக்கட்டு பகுதியில் அதிக வலி ஏற்படுகிறது.தட்டச்சு வேலை,கணினி வேலை போன்ற காரணங்களால் கை மணிக்கட்டு பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டு பெரும் தொல்லையாக மாறுகிறது.இந்த மணிக்கட்டு வலி குணமாக இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பம் பூ – இரண்டு தேக்கரண்டி
2)மிளகு – நான்கு
3)தண்ணீர் – இரண்டு டம்ளர்

செய்முறை விளக்கம்:-

1.அதிக மருத்துவ குணம் நிறைந்த வேப்பம் பூ இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.அடுத்து இதனுடன் நான்கு கருப்பு மிளகு சேர்த்து உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பின்னர் பாத்திரம் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும்.

4.பிறகு இடித்த வேப்பம் பூ மிளகு கலவையை அதில் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் கால் டம்ளராக கொதித்து வரும் வரை காத்திருக்க வேண்டும்.பின்னர் இத்தனை வடிகட்டி பருகினால் மணிக்கட்டு வலி முழுமையாக குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள் – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.

2.பிறகு ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் மணிக்கட்டு வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.

2.பின்னர் இடித்த இஞ்சியை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பருகி வந்தால் மணிக்கட்டு வலி குணமாகும்.

Exit mobile version