Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தவறாக அனுப்பப்பட்ட UPI பேமெண்ட்களை திரும்ப பெற.. இதை மட்டும் செய்யுங்கள்!!

To reverse wrongly sent UPI payments.. Just do this!!

To reverse wrongly sent UPI payments.. Just do this!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வழிகாட்டுதல்களின் படி தவறுதலாக வேறொரு வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட பணத்தினை மீண்டும் பெறுவதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து வேறொரு வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்ட பணத்தினை மீண்டும் பெற நினைப்பவர்கள் கீழ் உள்ளவற்றை பின்பற்ற வேண்டும்.

✓ முதலில் தவறுதலாக வேறு ஒரு வங்கி கணக்கு அல்லது இன்டர்நெட் பேங்கிங் ஏதேனும் ஒன்றுக்கு உங்களுடைய பணம் அனுப்பப்பட்டு இருந்தால் முதலில் 18001201740 என்ற இலவச அழைப்பில் உங்களுடைய புகார்களை பதிவு செய்யலாம்.

அவ்வாறு பதிவு செய்யும் பொழுது நீங்கள் மாற்றி அனுப்பிய வங்கி கணக்கு ஆதாரம் மற்றும் அதனுடைய விவரங்கள் போன்றவற்றை சரிவர குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் 48 மணி நேரத்திற்குள் உங்களுடைய பணமானது மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்து விடும்.

✓ இரண்டாவதாக யுபிஐ அல்லது நெட் பேங்கிங் மூலம் வேறொருவருக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டீர்கள் என்றால் உங்களுடைய வங்கி கிளைகளை அனுப்புவதன் மூலம் பணத்தினை திரும்ப பெறலாம். உங்களுடைய வங்கி கிளைக்கு சென்றவுடன் தவறான ஆன்லைன் கட்டணத்தை நிரப்புவதற்கான படிவத்தை பெற்று அதில் நீங்கள் தவறுதலாக பணம் செலுத்தியவரினுடைய விவரங்களை உள்ளீடு செய்தல் வேண்டும்.

முக்கியமாக தவறுதலாக பணம் அனுப்பப்பட்டவரின் எண் தொகை மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். அதன் பின், வங்கி உங்களுக்கு உதவவில்லை அல்லது உங்களுடைய பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் உடனடியாக bankingombudsman.rbi.org.in என்ற இணையதள பக்கத்தில் தெரியப்படுத்துவதன் மூலமும் உங்களுடைய பணம் மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு வந்து சேரும்.

Exit mobile version