Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தாய்ப்பால் அதிகமாக சுரக்க.. தாய்மார்கள் இந்த ஒரு குழம்பு செய்து ஒருவேளை சாப்பிடுங்கள்!!

இன்றைய இளம் தலைமுறை தாய்மார்கள் சந்திக்கும் பெரிய சவால் தாய்ப்பால் பற்றாக்குறை தான்.பிறந்த குழந்தைக்கு ஊட்டச்சத்து உணவாக திகழும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க மூலிகை குழம்பு செய்து தாய்மார்கள் சாப்பிட வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

1)வர கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
2)கருப்பு மிளகு – அரை தேக்கரண்டி
3)வெள்ளை பூண்டு – ஐந்து பற்கள்
4)சின்ன வெங்காயம் – பத்து
5)சதகுப்பை – சிறிதளவு
6)சுக்கு துண்டு – ஒன்று
7)வர மிளகாய் – இரண்டு
8)கல் உப்பு – தேவையான அளவு
9)பெருங்காயத் தூள் – கால் தேக்கரண்டி
10)வெந்தயம் – அரை தேக்கரண்டி
11)தக்காளி – ஐந்து
12)தேங்காய் துருவல் – இரண்டு தேக்கரண்டி
13)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
14)மல்லி தூள் – அரை தேக்கரண்டி
14)எலுமிச்சை அளவு புளி – ஒன்று
15)சீரகம் – ஒரு தேக்கரண்டி
16)கண்டங்கத்திரி – சிறிதளவு
17)நல்லெண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

*முதலில் தக்காளி பழத்தை தண்ணீரில் கழுவிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து வெள்ளைப்பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

*அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி,அரை தேக்கரண்டி வெந்தயம்,இரண்டு வர மிளகாய்,ஒரு பீஸ் தோல் நீக்கிய சுக்கு,ஒரு தேக்கரண்டி சீரகம்,கண்ண்டங்கத்திரி,சதகுப்பை,அரை தேக்கரண்டி கருப்பு மிளகு போட்டு வாசனை வரும் அளவிற்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

*அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளி பழம்,வெள்ளை பூண்டு பற்கள் மற்றும் சின்ன வெங்காயத்தை வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.

*பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து எலுமிச்சை அளவு புளி போட்டு சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.

*அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து தக்காளி விழுதை போட்டு குறைவான தீயில் வதக்க வேண்டும்.அடுத்து வறுத்து அரைத்த பவுடரை அதில் போட்டு வதக்க வேண்டும்.

*பிறகு மஞ்சள் தூள்,கொத்தமல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும்.பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

*அடுத்து தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து கொதிக்கும் குழம்பில்.சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.இறுதியாக சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்த்து குழம்பை இறக்க வேண்டும்.இந்த குழம்பை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

Exit mobile version