Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

என்றும் 16 ஆக வாழ.. இந்த வீட்டு வைத்தியங்களை மட்டும் தொடர்ந்து செய்து வாருங்கள்!!

உங்களை நோய் நொடியில் இருந்து காக்கும் அற்புத பலன் தரும் வீட்டு வைத்தியங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இதை தினமும் செய்து வந்தால் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

1)வறட்டு இருமல் குணமாக தினமும் 20 மில்லி கற்பூரவல்லி கஷாயம் செய்து பருகலாம்.

2)மூக்கடைப்பு பிரச்சனை சரியாக புதினா,இஞ்சி,கற்பூரம்,கிராம்பு,வெற்றிலை ஆகியவற்றை தண்ணீரில் போட்டு ஆவிபிடிக்கலாம்.

3)நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க அரைக்கீரை கஷாயம் செய்து பருகி வரலாம்.

4)அல்சர்,வாய்ப்புண் குணமாக மணத்தக்காளி கீரை மற்றும் காயை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம்.

5)மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பில் இருந்து தப்பிக்கலாம்.

6)முள் சீத்தா பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் கேன்சர் செல்கள் அழிந்துவிடும்.

7)பப்பாளி பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.மலச்சிக்கல்,வாயுத் தொல்லை போன்றவை குணமாகும்.

8)முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு குணமாகும்.

9)தினம் ஒரு கிளாஸ் அருகம்புல் சாறு பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் கழிவுகள் அழியும்.

10)பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

11)முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் வலுவிழந்த எலும்புகள் இரும்பு போன்று வலிமை பெறும்.

12)செம்பருத்தி இதழை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

13)வேப்பிலை மற்றும் வேப்பம் பட்டையை உலர்த்தி பொடித்து பல் துலக்கி வந்தால் பற்களின் வலிமை அதிகரிக்கும்.

14)முகப்பரு இருப்பவர்கள் புதினா இலையை அரைத்து சாறு எடுத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

15)குமட்டலை கட்டுப்படுத்த எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலைகளை தண்ணீரில் போட்டு பருகி வந்தால் பலன் கிடைக்கும்.

16)கற்பூரவல்லி மற்றும் வெற்றிலையை நெருப்பில் வாட்டி நெஞ்சு பகுதியில் வைத்தால் சளி முழுவதும் கரைந்து வெளியேறிவிடும்.

17)எருக்கன் இலையை விளக்கெண்ணெயில் வாட்டி கால் பாதங்களில் வைத்தால் வலி குறையும்.

Exit mobile version