Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க.. இந்த ஒரு பருப்பில் துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

கொள்ளு பருப்பு நமது பாரம்பரிய உணவு வகையாகும்.இந்த கொள்ளு பருப்பு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும்.

கொள்ளு பருப்பு ஊட்டச்சத்துக்கள்:-

**கால்சியம்
**புரதம்
**வைட்டமின்கள்
**இரும்பு

கொள்ளு பருப்பு பயன்கள்:

1.உடல் எடையை குறைக்க உதவுகிறது.
2.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
3.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது.
4.உடல் கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.
5.மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது.
6.சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.
7.இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.
8.உடலுக்கு தேவையான புரதத்தை வழங்குகிறது.

கொள்ளு துவையல் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)கொள்ளு பருப்பு – ஒரு கப்
2)எண்ணெய் – தேவையான அளவு
3)வர மிளகாய் – நான்கு
4)தேங்காய் துருவல் – கால் கப்
5)புளி – ஒரு துண்டு
6)பூண்டு பற்கள் -நான்கு
7)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
8)பெருங்காயத் தூள் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் கொள்ளு பருப்பை வாணலியியல் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு வெள்ளை பூண்டு பற்கள்,கறிவேப்பிலை,தேங்காய் துருவல்,வர மிளகாய்,பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

அதன் பின்னர் இதை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு துண்டு புளி,வறுத்த கொள்ளு பருப்பு மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு கடுகு கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.இதை கொள்ளு துவையலில் போட்டு கலந்துவிட வேண்டும்.இந்த கொள்ளு துவையலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Exit mobile version