திருப்பதி ஏழுமலையானை காண செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! இதற்கான முன்பதிவு தொடக்கம்!
பக்தர்கள் அதிகளவு வந்து செல்லும் தளங்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இலவச டோக்கன் மற்றும் ரூ 300கட்டணம் செலுத்தி டோக்கன் பெற்று சாமி தரிசனம் செய்யும் முறைக்கு அனுமதி அளித்துள்ளது.
மேலும் இந்த டோக்கன்கள் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றது.அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான ரூ 300 டிக்கெட்டுகள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை பத்துமணிக்கு தேவஸ்தானத்தின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் தினமும் 35ஆயிரம் டிக்கெட் வீதம் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in./#/login என்ற இணையதளத்தில் சென்று முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து முன்பதிவு செய்த பக்தர்கள் வரும் 27ஆம் தேதி அன்று காலை 10 பணிக்கு அதே இணையதள மூலம் திருமலையில் தங்கும் இடத்திற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்கவும் வழிபடவும் நாளை காலை பத்து மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.
மேலும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான ஊஞ்சல் சேவை ,கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம் ,சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளாலாம்.மேலும் அந்த டிக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.