முதுமை காலத்திலும் தலைமுடி அடர் கருமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் 30 வயது கடந்தாலே அனைவருக்கும் முடி நரைத்துவிடுகிறது.எனவே இயற்கையான முறையில் நரைமுடியை கருமையாக்க இந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் எண்ணெய் – ஒரு லிட்டர்
2)மருதாணி இலை – ஒரு கைப்பிடி அளவு
பயன்படுத்தும் முறை:
*அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
*பிறகு அதில் ஒரு கைப்பிடி மருதாணி இலையை போட்டு கொதிக்க வையுங்கள்.
*தேங்காய் எண்ணெய் நிறம் மாறும் வரை சுண்டக் காய்ச்சி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
*பின்னர் இந்த தேங்காய் எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
*இந்த எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து பராமரித்து வந்தால் வெள்ளை முடி கருமையாவதோடு முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:
1)அவுரி இலை – ஒரு கப்
2)தேங்காய் எண்ணெய் – அரை லிட்டர்
3)பெரிய நெல்லிக்காய் – ஐந்து
பயன்படுத்தும் முறை:
*அடுப்பில் இரும்பு வாணலி வைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.
*பிறகு ஐந்து பெரிய நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
*பிறகு ஒரு கப் அவுரி இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.
*இந்த எண்ணெயை நன்றாக ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி தலைக்கு பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி அனைத்தும் அடர் கருமையாக மாறும்.
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் எண்ணெய் – 250 மில்லி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
*அடுப்பில் வாணலி வைத்து 250 தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
*பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு காய்ச்சி ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வு மற்றும் வெள்ளைமுடி பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:
1)விளக்கெண்ணெய் – அரை லிட்டர்
2)கருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
*இரும்பு வாணலி ஒன்றில் அரை லிட்டர் விளக்கெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
*பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பிறகு தலைக்கு தடவி வந்தால் வெள்ளை முடி அடர் கருமையாக மாறும்.
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் எண்ணெய் – 25 மில்லி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
*கிண்ணத்தில் 25 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் நரைமுடி அனைத்தும் கருமையாக மாறும்.